கழிவு நீர் கால்வாய் இல்லாமல் தவிக்கும் நகரம்

பல ஆண்டுகளாக வேப்பனஹள்ளி நகர்த்தில் கழிவுநீர் கால்வாய் இல்லை என அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.;

Update: 2024-06-18 13:43 GMT

கழிவுநீர்

 கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி சட்டமன்ற தொகுதியானது உருவாகி 15 வருடங்கள் ஆகியுள்ளது. தமிழகத்திலேயே முழுக்க முழுக்க ஊராட்சிகளைக் கொண்ட சட்ட மன்ற தொகுதி வேப்பனப்பள்ளி சட்டமன்ற தொகுதி ஆகும்.

வேப்பனப்பள்ளி சட்டமன்ற தொகுதி உருவாக்கப்பட்ட நிலையில் இருந்து இந்நாள் வரை ஊராட்சியாகவே உள்ளது. வேப்பனப்பள்ளி நகரத்தில் மட்டும் சுமார் 2500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில் வேப்பனப்பள்ளி நகரத்திற்கு கழிவுநீர் கால்வாய் வசதி இல்லை என்பது இப்பகுதி பொதுமக்களை பல ஆண்டு வேதனையாக இருந்து வருகிறது. இதனால் வேப்பனப்பள்ளி நகரில் காந்தி சிலை முதல் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வரை இருபுறமும் கழிவுநீர் கால்வாய் இல்லாததால் கடைகள் மற்றும் பகுதியில் வீடுகளில் வசிக்கும் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் மழை நேரங்களில் மழை நீர் சாலைகளில் தேங்கி நிற்பதாலும் கடைகளுக்குள் புகுந்து புகுந்து விடுகிறது.

Advertisement

இதனால் கழிவுநீர் கால்வாய் வசதி இல்லாததாலும் கடைகளிலிருந்து வெளியேறும் கழிவுநீர் ஆனது சாலையிலே விடப்படுகிறது. இந்த நீரால் சாலையில் செல்லும் பொதுமக்கள் வாகனஓட்டிகள் கடும் அவதிப்படுவதுடன் சாலையில் விடுப்படும் கழிவுநீரால் துர்நாற்றம் வீசி சுகதார சீர்கேடு ஏற்படுகிறது.

சட்டமன்ற தொகுதியாக இருந்தும் ஒரு கால்வாய் வசதி இல்லாமல் சட்டமன்ற தொகுதி இருப்பது இப்பகுதி பொதுமக்களையும் சமுக ஆர்வளர்களை குமுறலை ஏற்படுத்தியுள்ளது. பல முறை கழிவு நீர் கால்வாய் அமைக்க ஒரு காலத்தில் நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்தும் ஊராட்சி நிர்வாகம் செவி சாய்க்கவில்லை என பொதுமக்கள் குற்றச்சாட்டு வருகின்றனர். 

Tags:    

Similar News