சிறுபான்மையற்ற பள்ளிகளில் உபரி ஆசிரியர் பணி நிரப்பல் கலந்தாய்வு

சிறுபான்மையற்ற பள்ளிகளில் உபரியாக பணிந்து வரும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு நடைபெற்ற கலந்தாய்வில் 5 ஆசிரியர்கள் இடமாறுதல் பெற்றனர்.

Update: 2024-05-31 03:32 GMT

பைல் படம் 

கன்னியாகுமரி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் சிறுபான்மையற்ற பள்ளிகளில் உபரியாக பணிந்து வரும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு நேற்று காலை 10 மணி அளவில் தொடங்கி நடைபெற்றது. நாகர்கோவிலில் உள்ள  குமரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நடைபெற்ற இந்த கலந்தாய்வில் மாவட்டம் முதன்மை கல்வி அலுவலர் பாலதண்டாயுதபாணி தலைமை வகித்தார்.

இதில் மனவளக்குறிச்சி பாபுஜி மேல்நிலைப்பள்ளி, திற்பரப்பு தேவசம் உயர்நிலைப்பள்ளி, சுசீந்திரம் எஸ்எம்எஸ்எம் மேல்நிலைப்பள்ளி, கோட்டார் டிவிடி மேல்நிலைப்பள்ளி மற்றும் மருதங்கோடு ஆபிரகாம் நினைவு மேல்நிலைப் பள்ளி ஆகிய ஐந்து பள்ளிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.     இந்த பள்ளியில் இருந்து ஆசிரியர்கள் இந்த கலந்தாய்வில் பங்கு ஏற்றனர். நாகர்கோவில் நடைபெற்ற கலந்தாய்வில் முதுகலை ஆசிரியர் நான்கு பேரும், பட்டதாரி ஆசிரியர் ஒருவர் என மொத்தம் ஐந்து பேர் இடம் மாறுதல் பெற்றனர்.

Tags:    

Similar News