செய்யாறு புறவழி சாலையில் மின்சாரம் தாக்கி பசு மாடு பலி
செய்யாறு புறவழி சாலையில் உயர் அழுத்த மின்கம்பம் சாய்ந்தில் மின்சாரம் தாக்கி பசு மாடு பலியானது.
செய்யாறு புறவழி சாலையில் உயர் அழுத்த மின்கம்பம் சாய்ந்து தரையில் இருந்த மின்ஓயர்கள் மூலம் மின்சாரம் தாக்கி பசு மாடு பலி, திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு புறவழி சாலையை ஒட்டி அமைந்துள்ள தனியார் அரிசி ஆலை ,சினிமா தியேட்டருக்கு புறவழிச் சாலை வழியாக 11kv உயர் மின்னழுத்த ஒயர்கள் மூலம் மின் சப்ளை செய்யப்படுகிறது.
தியேட்டர் மற்றும் அரிசி ஆலை ஒட்டிய பகுதியிலுள்ள மனைப்பிரிவுகளில் மழைநீர் மற்றும் கழிவுநீர் தேங்கிஉள்ளது. இதனால் அங்குள்ள உயர் மின்னழுத்த கம்பம் மண் இலகியதால் சாய்ந்து உள்ளது.
இதனை அறியாத அப்பகுதி மக்கள் மாடுகளை மேய்ச்சலுக்கு அனுப்பி உள்ளனர் அப்போது எதிர்பாராத விதமாக தரையில் கிடந்த மின் கம்பியை தாண்டும் போது மின்சாரம் தாக்கி ஹவாமா(45) என்பவரின் பசு மாடு பலியாகி உள்ளது.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த மின்வாரியதுறையினர் மின்சாரத்தை நிறுத்தி மின்கம்பங்களை சீரமைக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். மேலும் தகவல் அறிந்த காவல்துறையினர் மின்சாரம் தாக்காமல் இருக்க பொதுமக்களை அப்புறப்படுத்திபாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
மின்சாரம் தாக்கி பசு மாடு பலியான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது