காரின் குறுக்கே வந்த மாடு - உயிர் தப்பிய பாஜக நிர்வாகி

விருதுநகர் அருகே நான்கு வழிச்சாலையின் சென்டர் மீடியேனில் மேய்ந்து கொண்டிருந்த மாடு திடீரென சாலையை கடக்க முயன்ற போது கார் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பாஜக நிர்வாகி அதிர்ஷ்டவசமாக உயிர் தரப்பினார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Update: 2024-06-19 06:54 GMT

விருதுநகர் மாவட்ட பாஜக பார்வையாளர் பொறுப்பு வகிக்கும் அருப்புக்கோட்டையை சேர்ந்த வெற்றிவேல். இவர் நேற்று  மதியம் தனது இனோவா காரில் சொந்த வேலையாக சாத்தூர் சென்று விட்டு விருதுநகர் நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்பொழுது மதுரை- நெல்லை நான்கு வழி தேசிய நெடுஞ்சாலையான விருதுநகர் ஆர்.ஆர் நகர் தனியார் சிமெண்ட் தொழிற்சாலை அருகே கார் வந்த போது செண்டர் மீடியேட்டரில் வளர்ந்திருந்த புல்லை மேய்ந்து கொண்டிருந்த மாடு ஒன்று சாலையை கடக்க முயன்ற பொழுது எதிரே வந்த கார் மீது திடீரென மோதி விபத்து ஏற்பட்டது.

மாடு மோதியதில் காரின் முன் பக்க பகுதிகள் முழுவதுமாக சேதம் அடைந்தன. காரில் ஏர் பேக்குகள் இருந்த காரணத்தினால் அதிஷ்டவசமாக பாஜக நிர்வாகி வெற்றி வேல் மற்றும் டிரைவர் எவ்வித காயம் இன்றி உயிர் தப்பினர். மேலும் காரில் மோதிய மாட்டிற்கு கால் முறிந்து உயிருக்கு போராடி வருகிறது. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வச்சக்காரப்பட்டி போலீசார் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News