கழிப்பறையை பயன்படுத்த அச்சப்படும் பெண்கள்
திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகம் பின்பு செயல்பட்டு வரும் பெரிய பாலாஸ்பத்திரி என அழைக்கப்படும் மகப்பேறு மருத்துவமனையில் கழிப்பறையின் கதவுகள் நீண்ட காலமாக பெயர்ந்து கிடப்பதால்; இந்த கழிப்பறையை பயன்படுத்த பெண்கள் அச்சப்படுகின்றனர்.;
By : King 24X7 News (B)
Update: 2024-05-03 10:42 GMT
சேதமடைந்த கழிப்பறை
திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகம் பின்பு செயல்பட்டு வரும் பெரிய பாலாஸ்பத்திரி என அழைக்கப்படும் மகப்பேறு மருத்துவமனையில் ஆண், பெண் என தனித்தனியாக கழிப்பறை கட்டப்பட்டுள்ளது. ஆனால் அந்த கழிப்பறையின் கதவுகள் நீண்ட காலமாக இன்று வரை பெயர்ந்து கிடப்பதால் இந்த கழிப்பறையை பயன்படுத்த பெண்கள் அச்சப்படுகின்றனர் மேலும் ஒரு கையில் கதவைப் பிடித்துக் கொண்டு இயற்கை உபாதைகளை கழிக்கும் நிலைமை உள்ளது.