சென்னையில் ஆடி மாதத்தில் அம்மன் கோவில்களுக்கு ஒருநாள் சுற்றுலா!

Update: 2024-07-18 10:41 GMT

அம்மன் கோவில்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் அம்மன் கோவில்களுக்கு ஒருநாள் சிறப்பு சுற்றுலா ஏற்பாடு செய்யப்படுகிறது. 

திருவல்லிக்கேணி வாலாஜா சாலையில் உள்ள தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக அலுவலகத்தில் இருந்து செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் புறப்பட்டு செல்லும். காலை 8.30மணிக்கு தொடங்கி மாலை 7 மணி வரை அம்மன் கோவில்களுக்கு வேன் மூலம் அழைத்து செல்லப்படுகிறார்கள்.

மயிலாப்பூர் கற்பகாம்பாள் கோவில், முண்டககண்ணி அம்மன், கோல விழியம்மன், தி.நகர் ஆலயம்மன், முப்பாத்தம்மன், சைதாப்பேட்டை பிடாரி இளங்காளி அம்மன், பெசன்ட் நகர் அஷ்டலட்சுமி, மாங்காடு காமாட்சி அம்மன், திருவேற்காடு தேவி கருமாரி அம்மன், கீழ்ப்பாக்கம் பாதாள பொன்னியம்மன் ஆகிய கோவில்களில் அம்மனை தரிசிக்க ஏற்பாடு செய்யப்படும். இதற்கான கட்டணம் ரூ.800.

மற்றொரு அம்மன் சுற்றுலா திட்டமானது பாரிமுனை-காளிகாம்பாள் கோவில், ராயபுரம் அங்காள பரமேஸ்வரி, திருவொற்றியூர் வடிவுடையம்மன், பெரியபாளையம் பவானி அம்மன், புட்லூர் அங்காள பரமேஸ்வரி, திருமுல்லைவாயல் திருவுடையம்மன் மற்றும் பச்சையம்மன், கொரட்டூர் செய்யாத்தம்மன், வில்லிவாக்கம் பாலியம்மன் கோவில் ஆகிய அம்மன் கோவில்களுக்கு அழைத்து செல்லப்படுகிறார்கள். மதியம் கோவிலில் அன்னதானம் வழங்கப்படும். இந்த சுற்றுலா திட்டத்திற்கான கட்டணம் ரூ.1000.

ஆடி அம்மன் கோவில் சுற்றுலாவிற்கு ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்ய வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News