கெங்கவல்லி அருகே கிணற்றில் விழுந்த மான் உயிருடன் மீட்பு
கெங்கவல்லி அருகே கிணற்றில் விழுந்த மான் உயிருடன் மீட்கப்பட்டது.;
By : King 24X7 News (B)
Update: 2024-04-30 10:46 GMT

கெங்கவல்லி
கெங்கவல்லி அருகே செந்தாரப்பட்ட வனப்பகுதியில் இருந்து நான்கு வயது புள்ளிமான் ஒன்று நேற்று காலை உணவு தேடி ஊருக் குள் புகுந்தது. அப்போது, நாய்கள் துரத்திய தால் ஓட்டம் பிடித்த மான், தனியார் தோட் டத்திற்குள் புகுந்தது.
பின்னர், அங்குள்ள கிணற்றில் தவறி விழுந்தது. தகவல் அறிந்து கெங்கவல்லி தீயணைப்பு நிலைய அலுவலர் செல்லப்பாண்டியன் மற் ₹றும் வீரர்கள் விரைந்து சென்று மானை உயிருடன் மீட்டனர். தொடர்ந்து வனச்சரகர் முருகேசனிடம் ஒப்படைத்தனர்.