செம்மண் கடத்தும் கும்பலை கட்டுப்படுத்த கோரிக்கை
குமரி மாவட்டத்தில் தற்போது களியக்காவிளை, மார்த்தாண்டம், பளுகல் சுற்றுவட்டார பகுதிகளில் செம்மண் கடத்தல் அதிகரித்துள்ளது. தனியார் நிலங்கள், புறம்போக்கு நிலங்களில் இருந்து அதிகமாக செம்மண் கடத்தப்படுகிறது. இதற்காக களியக்காவிளை, மார்த்தாண்டம், பளுகல் பகுதிகளில் குறிப்பிட்ட சில கும்பல்கள் உள்ளன.
இதுகுறித்து புகார் எழுந்ததால் தனிப்படை அமைத்து கடத்தல் வாகனங்கள் ஜே.சி.பி. எந்திரம், கிட்டாச்சி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டன. இதனால் செம்மண் கடத்தல் சில மாதங்களாக கட்டுக்குள் இருந்தது.
தற்போது மீண்டும் களியக்காவிளை, மார்த்தாண்டம், பளுகல் சுற்றுவட்டார பகுதியில் இரவோடு இரவாக செம்மண் கடத்தல் அதிகம் நடந்து வருகிறது. எனவே செம்மண் கடத்தல் கும்பலை கட்டுப்ப டுத்த மாவட்ட கலெக்டர் மற்றும் போலீஸ் சூப்பிரண்டு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வ லர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.