தென்காசி அருகே பெரும் விபத்து தவிர்த்த விவசாயி

பெரும் விபத்து தவிர்த்த விவசாயிக்கு பாராட்டு குவிந்தது

Update: 2024-02-25 07:48 GMT

டார்ச் லைட் அடித்து சிக்னல்

தமிழக கேரளா எல்லையில் இன்று அதிகாலையில் எஸ் வளைவு பகுதி அருகே அந்த வழியாக வந்த லாரி தண்டவாளத்தில் சிக்கி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அதே நேரத்தில் பாலக்காடு நோக்கி விரைந்து சென்ற ரயில் வந்து கொண்டிருந்து அதனை பார்த்த புளியரையை சேர்ந்த விவசாயி சண்முகையா என்பவர் ரயிலை நிறுத்தி விட வேண்டும் என ஓடி சென்று சற்று தொலைவில் நின்று டார்ச் லைட் அடித்து சிக்னல் காண்பித்து ரயிலை நிறுத்தியுள்ளார். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதைக் கண்ட அப்பகுதி பொதுமக்களும் ரயில்வே ஊழியர்களும் விவசாய சண்முகையாவை  வெகுவாக பாராட்டினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News