ரெட்டியார்சத்திரம் அருகே முள்புதரில் இறந்து கிடந்த பெண் சிசு

ரெட்டியாா்சத்திரம் அருகே முள்புதரில் இறந்து கிடந்த பெண் சிசுவின் உடலைக் போலீசார் மீட்டு விசாரித்து வருகின்றனா்.

Update: 2024-05-30 08:46 GMT

இறந்து கிடந்த சிசு

திண்டுக்கல் ரெட்டியார்சத்திரம் தோப்புப்பட்டி காலனி அருகே இறந்த நிலையில் பச்சிளம் குழந்தை மீட்பு திண்டுக்கல் ரெட்டியார்சத்திரம் தோப்புப்பட்டி காலனி அருகே இறந்த நிலையில் குழந்தை கிடப்பதாக ரெட்டியார்சத்திரம் காவல் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

உடனே சம்பவ இடத்திற்கு வந்த ரெட்டியார்சத்திரம் காவல் நிலைய போலீசார் பச்சிளம் குழந்தையை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் அப்பகுதியில் யாருக்கு குழந்தை பிறந்துள்ளது இல்லை வேறு பகுதிகளில் இருந்து இங்கு கொண்டு வந்து போட்டுவிட்டு சென்றுள்ளனரா என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News