மருதாடு கிராமத்தில் குடிசை வீடு தீப்பற்றி விபத்து
மருதாடு கிராமத்தில் குடிசை வீடு தீப்பற்றி விபத்து திமுக சார்பில் நிவாரண உதவி.;
By : King 24x7 Angel
Update: 2024-02-05 10:24 GMT
திமுக சார்பில் நிவாரண உதவி.
வந்தவாசி அடுத்த மருதாடு கிராமத்தில் தீ விபத்தில் ஆதவரவற்ற முதியவர்கள் வீடு முழுவதுமாக கருகியது பாதிக்கபட்ட குடும்பத்திற்கு தொகுதி திமுக சார்பில் நிவாரண உதவி தொகை மாவட்ட செயலாளர் எம்.எஸ்.தரணிவேந்தன், எம்எல்ஏ எஸ்.அம்பேத்குமார் வழங்கினர். வந்தவாசி அடுத்த மருதாடு கிராமத்தை சேர்ந்தவர் ராமு இவரது மனைவி பொன்னம் மாள்(60) தம்பதிக்கு 8வயதில் ஆண் பிள்ளை மரணம் அடைந்ததால் ஆதரவற்ற நிலையில் இருவரும் வசித்து வருகின்றனர் கூலி வேலைக்கு சென்று அன்றாடம் கிடைக்கும் கூலி தொகையை கொண்டு ரேசன் அரியில் குடும்பம் நடத்திவருகின்றனர். உறவினரின் காலி இடத்தில் கடந்த 20 வருடங்களுக்கு மேலாக குடிசைவீடுகட்டி குடியிருந்துவந்த நிலையில் திடீர் என குடிசை வீடு முழுவதும் தீயில் கருகி சேதமானது, அக்கம்பக்கத்தினர் போராடியும் தீ அனைக்க முடியாத நிலை ஏற்பட்டது. அக்கம் பக்கத்தில் உள்ள வீடுகள் மாடி வீடு என்பதால் தீ பரவாமல் இருந்தது. இந்நிலையில் தீ விபத்தில் பாதிக்கபட்ட குடும்பத்தினருக்கு தொகுதி திமுகசார்பில் ரொக்கப்பணம் ரூ.5 ஆயிரம் அரிசி மூட்டை பாய் தலையணை, குடம் உள்ளிட்ட வீட்டு உபயோ கம்பொருட்கள் எம்எல்ஏ எஸ்.அம்பேத்குமார் தலைமையில் வடக்கு மாவட்ட செயலாளர் எம். எஸ்.தரணிவேந்தன் வழங்கினார். அப்போது விவசாய அணி மாவட்ட அமைப்பாளர் எம்.சி.சந்திரன். மாவட்ட பிரதநிதி எம். எஸ்.ரமேஷ், ஊராட்சி மன்ற தலைவர் செல்வி வெங்கடேசன், துளசி, வெண்குன்றம் எம்.மாதவன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.