ஆரணியில் பானிபூரி கடையில் தீ விபத்து
By : King 24X7 News (B)
Update: 2023-11-19 10:43 GMT
கோப்பு படம்
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி-சேத்துப்பட்டு சாலையில் உள்ள லட்சுமி நகர் பகுதியில் ஆரணி டவுன், ஆரணிப் பாளையத்தை சேர்ந்த பாலாஜி என்பவர் பானிபூரி தயாரித்து மொத்த விற்பனை செய்து வருகிறார்.நேற்று மாலை பானிபூரி செய்து கொண்டிருந்தபோது திடீர் தீ விபத்து ஏற்பட்டு அங்கிருக்கும் பொருட்கள் எரிந்தது.
இதனால் உடனடியாக தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர், தீயணைப்பு நிலைய அலுவலர் (பொறுப்பு) பூபாலன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் உடனடியாக சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.இதனால் அங்கு பெரும் தீ விபத்து தவிர்க்கப்பட்டது. இது குறித்து ஆரணி நகர போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.