திருப்பத்தூர் அருகே சாம்பிராணி தயாரிக்கும் தொழிற்சாலையில் தீ விபத்து

திருப்பத்தூர் அருகே கம்ப்யூட்டர் சாம்பிராணி தயாரிக்கும் தொழிற்சாலையில் தீ விபத்தில் 20 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் கருகி சேதம் அடைந்தது.

Update: 2024-05-18 15:39 GMT

தீ விபத்தால் சேதம் அடைந்த பொருட்கள்

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகே கம்ப்யூட்டர் சாம்பிராணி தயாரிக்கும் தொழிற்சாலையில் தீ விபத்து-20 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் கருகி சேதம் திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியம் தோரணம்பதி ஊராட்சிக்குட்பட்ட குமாரம்பட்டி பகுதியில் திவாகர்நாத் என்பவருக்கு சொந்தமான கம்ப்யூட்டர் சாம்பிராணி தயாரிக்கும் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இன்று திடீரென மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு தொழிற்சாலை முழுவதும் தீ பற்றி எரிய தொடங்கியது. இதுகுறித்து அருகில் இருந்தவர்கள் திருப்பத்தூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்ப துறை வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

ஆனால் அதற்குள் தொழிற்சாலை முழுவதும் தீயில் கருகி சுமார் 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீயில் கருகி நாசமானது. இதுகுறித்து திருப்பத்தூர் கிராமிய போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மின்கசிவு காரணமாக தீ விபத்து நடந்ததாக கூறப்படுகிறது.

Tags:    

Similar News