வெயிலால் மயங்கி விழுந்து மாணவன் பலி

ஆவடி அருகே நண்பரின் இறுதி சடங்கில் பங்கேற்க வந்த மாணவன் கடும் வெயிலால் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.;

Update: 2024-06-02 03:10 GMT
வெயிலால் மயங்கி விழுந்து மாணவன் பலி

பைல் படம் 

  • whatsapp icon
ஆவடி அடுத்த திருநின்றவூர், கோமதிபுரத்தைச் சேர்ந்தவர் ஹரிசுதன், 17; பிளஸ் 2 படித்தவர். இதய நோயால் உடல் நலம் பாதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி, 30ம் தேதி உயிரிழந்தார். அவரது இறுதி சடங்கில் பங்கேற்க, பட்டாபிராமைச் சேர்ந்த, அவருடன் படித்த சக்தி, 17, என்பவர், திருநின்றவூருக்கு சென்றார். அப்போது, கடும் வெயில் காரணமாக, அவர் திடீரென மயங்கி விழுந்தார். கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி, நேற்று காலை, அவரும் உயிரிழந்தார். இது குறித்து, திருநின்றவூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
Tags:    

Similar News