துறையூர் பழைய நகராட்சி அலுவலகத்தில் தீவிபத்து
திருச்சி அருகே துறையூரில் பழைய நகராட்சி கட்டிடத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.. இதில் தூய்மை பணி தளவாடப் பொருட்கள் எரிந்து நாசமாயின.
திருச்சி மாவட்டம் துறையூர் பேருந்து நிலையம் அருகே பழைய நகராட்சி கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடத்தின் வடபுறத்தில் உள்ள அறையில் தூய்மை பணிகள் செய்வதற்கான தளவாடப் பொருட்கள் வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் இரவு 9 மணியளவில் திடீரென தளவாடப் பொருட்கள் இருந்த அறையில் இருந்து புகையை வெளிவர தொடங்கியது. அருகில் இருந்தவர்கள் பழைய நகராட்சி வளாகத்தில் கொசு மருந்து அடித்திருக்கலாம் என கருதிய படி இருந்தனர்.
நேரம் செல்ல செல்ல ஒரே புகைமண்டலமாக காட்சியளித்தது. அருகில் சென்று பார்த்த பொழுது அறையில் வைக்கப்பட்டிருந்த பொருட்கள் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்ததை கண்ட பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து இதுகுறித்து துறையூர் தீயணைப்பு துறையினருக்கு உடனடியாக தகவல் அளித்தனர். விரைந்துவந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்க போராடினர் அதற்குள் தூய்மைப் பணிகளுக்கானதளவாடப் பொருட்கள்தூய்மை பணியாளர்கள் பயன்படுத்தும் கையுறைகள் முக கவசங்கள்ப்ளீச்சிங் பவுடர் மூட்டைகளில் தீ மளமளவென பரவியது மின்கசிவு காரணமாகதிடீர் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
தீயணைப்பு துறையினர் சுமார் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர் மேலும் தீ பரவாமல் இருக்க ரசாயன கலவை பயன்படுத்தி தீயை முற்றிலுமாக அனைத்தும் அணைத்தனர். பழைய நகராட்சி கட்டிடத்தில் நடந்த திடீர் தீ விபத்தில் ஏற்பட்ட புகையானது பேருந்து நிலையம் முழுவதும் பரவி புகை மண்டலமாக காட்சியளித்தது.உடனடியாக மின்சாரம் நிறுத்தப்பட்டுதீயணைக்கும் பணி நடைபெற்றது. இது பற்றி தகவல் அறிந்த துறையூர் நகர மன்ற தலைவர் செல்வராணி மலர் மன்னன் மற்றும் நகர் மன்ற உறுப்பினர்கள் நகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர்.மேலும் தகவல் அறிந்து பொதுமக்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது