பழவேற்காடு பகுதியில் வெளிநாட்டு பறவைகள் கூட்டம்

பழவேற்காடு பகுதியில் வெளிநாட்டு பறவைகளான பிளமிங்கோ, பெலிகான் உள்ளிட்ட பல்வேறு பறவைகள் பறந்து திரிகிறது.

Update: 2024-02-20 10:27 GMT

பழவேற்காடு பகுதியில் வெளிநாட்டு பறவைகள் கூட்டம்

திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு பகுதியானது அழகிய சுற்றுலா பகுதி ஆகும். இங்கு மிக உயரமான கலங்கரை விளக்கமும் அழகிய கடற்கரையும் இந்தியாவிலேயே இரண்டாவது மிகப்பெரிய ஏரியும் உள்ளது. இங்கு மீன் பிடி தொழில் பிரதானமாக நடந்து வருகிறது. மிகப் பெரிய ஏரியையும் நீர் நிலைகளையும் கொண்ட பகுதி என்பதால் இங்கு ஏராளமான பறவைகள் எப்போதும் தங்களுடைய வாழ்வாதாரத்துக்காக இரை தேடி இப்பகுதிக்கு வருகிறது. ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் தொடங்கி மே ஜூன் மாதம் வரை பறவைகள் இங்கு அதிகமாக காணப்படும். தற்போது சீசன் தொடங்கியுள்ளதால் வெளிநாட்டு பறவைகளான பிளமிங்கோ, பெலிகான் உள்ளிட்ட பல்வேறு பறவைகள் வர தொடங்கியுள்ளன. இதனால் பழவேற்காடு பகுதியில் எங்கு பார்த்தாலும் வெள்ளை வெளேர் என வெண்ணிற ஆடை போற்றியது போல் பறவைகள் பறந்து திரிகிறது. இதனை காண்பதற்கு இப்பகுதியில் சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
Tags:    

Similar News