ஏற்காடு குண்டூரில் பற்றி எரிந்த காட்டுத் தீ !

சேலம் மாவட்டம் சேர்வராயன் மலைத்தொடரில் உள்ள ஏற்காடு மலையில் கடந்த வாரம் 40 அடி பாலத்தில் இருந்து 60 அடி பாலம் வரை பயங்கர காட்டுத்தீ பிடித்து எரிந்தது. இந்த தீயை 3 நாட்கள் போராடி தீயணைப்பு வீரர்கள் மற்றும் வனத்துறையினர் அணைத்தனர்.

Update: 2024-03-23 06:45 GMT

காட்டுத் தீ

சேலம் மாவட்டம் சேர்வராயன் மலைத்தொடரில் உள்ள ஏற்காடு மலையில் கடந்த வாரம் 40 அடி பாலத்தில் இருந்து 60 அடி பாலம் வரை பயங்கர காட்டுத்தீ பிடித்து எரிந்தது. இந்த தீயை 3 நாட்கள் போராடி தீயணைப்பு வீரர்கள் மற்றும்வனத்துறையினர் அணைத்தனர். வனத்துறையினர் விசாரணையில் கருங்காலி மலைக்கிராம பகுதியில் தான் முதல் காட்டுத்தீ பரவியது தெரியவந்தது. மேலும் மலைப்பகுதியில் காட்டுத்தீ பரவாமல் தடுக்க வனத்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று முன்தினம் மதியம் ஏற்காடு குண்டூர் மலைக்கிராமம் அருகே திடீரென காட்டுத்தீ பிடிக்க தொடங்கியது. இந்த தீ கொளுந்துவிட்டு எரிந்தது. இதுகுறித்து தகவல் கிடைத்ததும் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் தீத்தடுப்பு காவலர்கள், வன ஊழியர்கள், மலைக்கிராம மக்கள் என 100-க்கு மேற்பட்டவர்கள் இணைந்து தீயை அணைக்கும் முயற்சியில் துரிதமாக ஈடுபட்டனர். சுமார் 4 மணி நேரம் போராடி அந்த தீயை அணைத்தனர். தீ வேறு இடத்தில் பரவாமல் தடுக்க வனத்துறையினர் அங்கு தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். இருந்தாலும் ஆங்காங்கே அவ்வப்போது லேசாக தீப்பிடித்தது. உடனடியாக அந்த தீயை வனத்துறையினர் அணைத்தனர். வெயில் காரணமாக மூங்கில் மரங்கள் உரசியதால் இந்த தீ பிடித்திருக்கலாம் என்று வனத்துறையினர் கருதுகின்றனர். ஏற்காடு மலையில் அடுத்தடுத்து 2 இடங்களில் ஏற்பட்ட காட்டுத்தீயில் பலவகை மரங்கள் எரிந்து சேதமானது. இதன் பாதிப்பு குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News