முதல்வருக்கு நன்றி கூறும் விதமாக கோலம் வரைந்த முன்னாள் எம்எல்ஏ
பெண்கள் தின விழாவில் மகளிர் நலம் காக்கும் முதல்வருக்கு நன்றி கூறும் விதமாக கோலம் வரைந்த திமுகவினர்.
By : King 24X7 News (B)
Update: 2024-03-08 17:12 GMT
இன்று சர்வதேச மகளிர் தினம் உலகெங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது அதை முன்னிட்டு தமிழகத்தில் பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து பெண்களுக்காக இலவச பேருந்து போக்குவரத்து வசதி, மற்றும் மகளிர் உரிமை தொகை உள்ளிட்ட
பல்வேறு பெண்களுக்கு வழங்கப்பட்ட வரும் அரசு சலுகைகள் மற்றும் பெண்கள் நலன் காக்கும் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களின் ஆட்சியை குறிப்பிடும் வகையில் இன்று காலை தர்மபுரி சட்டமன்ற தொகுதி தடங்கம் ஊராட்சியில் தர்மபுரி சட்டமன்ற தொகுதியின்
முன்னாள் உறுப்பினரும் தர்மபுரி திமுக கிழக்கு மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்பிரமணி அவர்களது இல்லத்தில் கோலங்கள் வரைந்து பெண்கள் தின விழாவை கொண்டாடினார். இந்த நிகழ்வில் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.