சட்டவிரோதமாக தண்ணீர் திருடும் கும்பல்
சிவகாசியில் பெரியகுளம் கண்மாயில் சட்டவிரோதமாக தண்ணீர் திருடும் கும்பல் மீது நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Update: 2024-05-02 13:38 GMT
சிவகாசி கண்மாயில் சட்ட விரோதமாக தண்ணீரை திருடும் கும்பல் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தல்... விருதுநகர் மாவட்டம், சிவகாசி பெரியகுளம் கண்மாயில் சட்ட விரோதமாக தண்ணீரை திருடும் நபர்கள் மீது நடவடிக்கை வேண்டும்.சிவகாசி மாநகராட்சி அருகில் பெரியகுளம் கண்மாய் உள்ளது இந்த கண்மாய் 72 ஏக்கா் நிலப்பரப்பு கொண்டதாகும் கடந்த பருவ மழையில் பெரியகுளம் கண்மாய் 90 சதவிகித கொள்ளவை எட்டியது. நகரின் மையப் பகுதியிலுள்ள இந்த கண்மாய் சிவகாசி மாநகரின் நிலத்தடி நீர் மட்டத்திற்கு ஆதாரமாக உள்ளது தொண்டு நிறுவனங்கள் இந்த கண்மாயை தூர்வாரி பாதுகாத்து வருகின்றன.இந்த கண்மாயில் சிலர் சட்டவிரோதமாக தண்ணீா் எடுத்து வர்த்தக ரீதியாக அதிக திறன் கொண்ட மோட்டார்கள் வாயிலாக குழாய்கள் பொருத்தி தண்ணீர் உறிஞ்சுவது,டிராக்டர் மூலம் தண்ணீர் எடுப்பது என, பல வழிகளில் திருட்டு நடந்து வருகிறது.இதே நிலை தொடர்ந்தால் கண்மாயில் தண்ணீர் வற்றுவதுடன் நிலத்தடி நீர் மட்டம் கடுமையாக பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.எனவே பெரியகுளம் கண்மாயில் சட்டவிரோதமாக நிலத்தடி நீரை உறியும் நபர்களை அடையாளம் கண்டு அவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்ய வேண்டும், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கண்மாய் அருகே மினரல் வாட்டர்,வாட்டர் சர்வீஸ் கம்பெனிகள் இயங்க தடை விதிக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.