50 அடி ஆழ கிணற்றில் விழுந்த ஆடு பலி
ராசிபுரம் அருகே 50 அடி ஆழ கிணற்றில் விழுந்த ஆடு பலியானது.
By : King 24x7 Website
Update: 2023-12-14 08:16 GMT
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த கோனேரிப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் மாரிமுத்து, 56. இவருக்கு சொந்தமான ஆடு ஒன்று கோனேரிப்பட்டி மேற்கு தெருவைச் சேர்ந்த நீலா கிருஷ்ணன் என்பவருக்கு சொந்தமான கிணற்றின் அருகே மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது, எதிர்பாராத விதமாக ஆடு கிணற்றில் விழுந்தது. இது குறித்து ராசிபுரம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ராசிபுரம் தீயணைப்பு நிலையை வீரர்கள் சுமார், 50 அடி ஆழமுள்ள கிணற்றில் இறங்கி ஆட்டை மீட்டனர். உயிர் போகும் தருவாயில் இருந்த ஆட்டிற்கு முதலுதவி செய்யப்பட்டது, இருப்பினும் ஆடு பலியானது.