சரக்கு வாகனத்தின் மீது அரசு பேருந்து மோதி விபத்து !

சரக்கு வாகனத்தின் மீது அரசு பேருந்து மோதி விபத்து. எட்டு பேர் படுகாயம். காவல்துறை வழக்கு பதிவு.

Update: 2024-04-13 12:08 GMT

விபத்து

சரக்கு வாகனத்தின் மீது அரசு பேருந்து மோதி விபத்து. எட்டு பேர் படுகாயம். திருப்பூர் மாவட்டம் காங்கேயம் ஆலப்பட்டி ஆண்டி மடக்காடு பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ் மகன் ஜெயராஜ் வயது 30. இவர் அசோக் லேலண்ட் தோஸ்த் வாகனத்தின் டிரைவராக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் ஏப்ரல் பதினோராம் தேதி இரவு இவரது வாகனத்தில் புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி மாங்கொட்டை தெற்கு தெரு பகுதியைச் சேர்ந்தவர் பழனி குமார் வயது 49, அருகில் உள்ள இயன்காடு பகுதியைச் சேர்ந்தவர் சேகர் வயது 42, பாலையா வயது 60, மாங்கொட்டை தெற்கு தெருவை சேர்ந்த பாலசுப்பிரமணி வயது 42, அதே பகுதியைச் சேர்ந்த முருகன் வயது 60, ஆகியோர் இந்த சரக்கு வாகனத்தில் பயணித்தனர்.

இந்த வாகனம் கரூரிலிருந்து கோவை செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது இரவு 11 மணி அளவில், பவித்திர மேடு விஏஓ அலுவலகம் அருகே சென்றபோது எதிர் திசையில், திருப்பூர் மாவட்டம் மூலனூர், சாணார்பாளையம் பகுதியைச் சேர்ந்த ராஜேஷ்குமார் வயது 44 என்பவர் ஓட்டி வந்த அரசு பேருந்து சரக்கு வாகனத்தின் மீது மோதி விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் சரக்கு வாகனத்தில் பணித்த அனைத்து பேரும், அரசு பேருந்தில் பயணித்த, கரூர் மாவட்டம், பசுபதிபாளையம், திண்ணப்பாநகரை சேர்ந்த சிங்காரவேல் மனைவி லட்சுமி வயது 57 உள்பட பலத்த காயமடைந்ததால், அவர்கள் அனைவரையும் மீட்டு, கரூரில் உள்ள நாச்சிமுத்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக, பழனிகுமார் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்று விசாரண மேற்கொண்ட காவல்துறையினர், அரசு பேருந்து ஓட்டுநர் ராஜேஷ் குமார் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் க. பரமத்தி காவல்துறையினர்.

Tags:    

Similar News