காங்கேயத்தில் அரசுபேருந்து சரக்கு வாகனத்தில் மோதி விபத்து

காங்கேயம் கொடுமுடி சாலையில் முன்னாள் சென்ற பிக்கப் ஆட்டோ மீது பின்னால் வந்த அரசு பேருந்து மோதி விபத்துக்குள்ளனது.;

Update: 2024-06-17 08:56 GMT

திருப்பூர் மாவட்டம், காங்கேயத்தில் காங்கேயம் பேருந்து நிலையம் முதல் கொடுமுடி வரை செல்லும் அரசு பேருந்து நேற்று மதியம் சுமார் 2 மணி அளவில் முத்தூர் பிரிவு அருகே சென்று கொண்டிருந்த போது முன்னாள் வைக்கோல் புற்களை ஏற்றிச் சென்ற பிக்கப் வாகனத்தில் மோதி விபத்தை ஏற்படுத்தியது.

இதில் பேருந்தின் முன்பக்கம் கண்ணாடிகள் உடைந்து சேதமடைந்தது.  இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த கொடுமுடி சாலைப்புதூர் பகுதியை சேர்ந்த சரோஜா வயது 65 என்பவருக்கு நெற்றியில் வெட்டுக்காயமும், வலது கை முட்டி அருகே சிறிய அடியும் ஏற்பட்டது,

Advertisement

மற்றும் பெருந்துறை, கம்பளியம்பட்டி பகுதியை சேர்ந்த கௌதம் வயது 7 என்ற சிறுவனுக்கு வலது கை முட்டி அருகே சிராய்ப்பு காயமும் ஏற்பட்டது. பின்னர் அருகிலிருந்தவர்கள் இவர்களை மீட்டு காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனை அடுத்து போலிஷ் விசாரணையில் அரசு பேருந்தை ஓட்டிய பேருந்து ஓட்டுநர் ராஜேந்திரன் வயது 42 என்பவரது அலட்சியத்தால் தான் இந்த விபத்து நடைபெற்றதாக பயணிகள் கூறியுள்ளனர். இதனை அடுத்து போலிஷார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News