இருசக்கர வாகனம் மீது அரசு பேருந்து மோதி விபத்து - ஒருவர் கவலைக்கிடம்
பாம்பாறு அணை பகுதியில் இருசக்கர வாகனம் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்தவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.;
Update: 2024-04-29 05:05 GMT
விபத்துக்குள்ளான வாகனம்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த பாம்பாறு அணை பகுதியில் ஊத்தங்கரை பகுதியில் இருந்து திருவண்ணாமலை நோக்கி சென்ற அரசு பேருந்து மீது பாம்பாறு அணை பகுதியில் இருந்து ஊத்தங்கரை நோக்கி சென்ற இருசக்கர வாகனம் அரசு பேருந்து மீது நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற நபர் கல்லாவி அருகே உள்ள பெருமாள் நாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்த அன்பரசு 28 தகப்பனார் பெயர் தீர்த்தகிரி என்பவருக்கு தலை கை கால் உள்ளிட்ட பகுதிகளில் அதிக காயம் ஏற்பட்ட நிலையில் ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர் அங்கு பரிசோதனை செய்த மருத்துவர் பரிந்துரையின் பெயரில் தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் இருசக்கர வாகனம் அரசு பேருந்து நேருக்கு நேர் மோதிய சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது