ஊத்தங்கரை அதியமான் மகளிர் கல்லூரியில் முப்பெரும் விழா

ஊத்தங்கரை அதியமான் மகளிர் கல்லூரியில் முப்பெரும் விழா கல்லூரியின் முதல்வர் முனைவர் திருமால்முருகன் பங்கேற்றார்.

Update: 2024-02-22 15:14 GMT

முப்பெரும் விழாவில் கலந்து கொண்டவர்கள் 

 கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அதியமான் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதுகலைத் தமிழ்த்துறை மற்றும் அவ்வையார் தமிழ் மன்றமும் இணைந்து முப்பெரும் விழா உலகதாய்மொழிதினவிழா, நூல்வெளியீட்டு விழா மற்றும் போட்டித் தேர்வுக்கான வழிகாட்டல் விழா நடைபெற்றது.

இவ்விழாவில் முதுகலைத் தமிழ்த்துறையைச் சேர்ந்த முதுகலை முதலாமாண்டு மாணவி பா.பர்ஷனா வரவேற்றார். அதியமான் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் சீனி.திருமால்முருகன் தலைமை வகித்தார். கல்லூரியின் தமிழ்துறை தலைவர் முனைவர் கோ.சவிதா எழுதிய சங்க இலக்கியத்தில் இனக்குழுத்தலைவர்களின் அறம் சார்ந்த வாழ்வியல்,

என்னும் நூலையும், அதியமான் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவிகளின் நெல்லிக்கனி இதழையும் என்ற நூலை வெளியிட அவற்றை வாணியம்பாடி மருதர் கேசரி ஜெயின் மகளிர் கல்லூரி முதுகலை தமிழாய்வுத்துறையின் ஆய்வு ஒருங்கிணைப்பாளர் மற்றும் உதவி பேராசிரியருமான முனைவர் பி.பாலசுப்ரமணியன் பெற்றுக்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து அதியமான் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் சீனி.திருமால்முருகன் உலக தாய் மொழி தினம் குறித்து சிறப்புரையாற்றினார். ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய உணர்வுகளையும் ,கருத்துகளையும் பகிர்ந்து கொள்ள மொழி அவசியமாகும். தனித்தமிழ் இயக்கத்தை உருவாக்கிய மறைமலை அடிகள் அவர்கள் தனித்தமிழுக்கு பழம் பெருமையை உருவாக்கியவர் என்று குறிப்பிட்டார்.

சங்க இலக்கியத்தில் இனக்குழுதலைவர்களின் அறம் சார்ந்த வாழ்வியல் என்னும் நூலில் அறகொங்கைகள் இனக்குழு தலைவர்களின் ஆளுமை , போர்கொடை மற்றும் வாழ்வியல் அறங்கள் குறித்து ஆராயப்பட்டுள்ளன என்று கூறி சிறப்பு உரையாற்றினார். வாணியம்பாடி மருதர்கேசரி செயின் மகளிர் கல்லூரி முதுகலை தமிழாய்வுத்துறை ஆய்வு ஒருங்கிணைப்பாளர் மற்றும் உதவி பேராசிரியர் முனைவர் பி.பாலசுப்ரமணியன் தமிழ் இலக்கியம் பயிலும் மாணவிகள் அனைவரும் இந்நூலை கண்டிப்பாக வாசிக்க வேண்டும் என்று கூறினார்.

இறுதியாக அதியமான் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ் துறை தலைவர் கோ.சவிதா தான் எழுதிய நூலானது முனைவர் பட்ட ஆய்வாகும். மக்களின் நலனை யார் காக்கின்றாரோ அவர்கள் தான் இனக் குழுதலைவர்கள் என்று மாணவிகளுக்கு புரியும் வகையில் கூறி நன்றி கூறினார்.

Tags:    

Similar News