கடலூரில் ஒரே நாளில் 842 மனுக்கள் குவிந்தது
கடலூரில் குறைதீர்வு கூட்டத்தில் ஒரே நாளில் 842 மனுக்கள் பெறப்பட்டன.;
By : King 24x7 Website
Update: 2023-10-31 10:48 GMT
குறைதீர்வு கூட்டம்
கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பொதுமக்கள் குறைகேட்பு நாள் கூட்டம் அனைத்துத்துறை அலுவலர்களுடன் மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பட்டா தொடர்பாக 178 மனுக்களும், ஆக்கிரமிப்பு தொடர்பாக 72 மனுக்களும், முதியோர் உதவித்தொகை தொடர்பாக 46 மனுக்களும், மகளிர் உரிமைத்தொகை தொடர்பாக 34 மனுக்களும், குழந்தைகள் கல்வி உதவித்தொகை தொடர்பாக 62 மனுக்களும், ஊரக வளர்ச்சி துறை தொடர்பான 56 மனுக்களும், காவல்துறை தொடர்பாக 31 மனுக்களும், தையல் எந்திரம் கோரி 45 மனுக்களும், வேலை வாய்ப்பு தொடர்பாக 60 மனுக்களும், மாற்றுத்திறனாளி நல அலுவலகம் தொடர்பாக 23 மனுக்களும், இதர மனுக்கள் 235 என மொத்தம் 842 மனுக்கள் அளிக்கப்பட்டது.