குடியாத்தத்தை குளிர்வித்த ஆலங்கட்டி மழை!
குடியாத்தம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஆலங்கட்டி மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.;
By : King 24x7 Angel
Update: 2024-05-03 04:51 GMT
ஆலங்கட்டி மழை
வேலூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக வெயில் 110 டிகிரியை கடந்து சுட்டெரித்து வருகிறது. இந்த நிலையில் குடியாத்தம் அடுத்த செம்பேடு, பட்டு, ஆலத்தூர், கூட நகரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மே 2ம் தேதி மாலை பலத்த காற்றுடன் கூடிய ஆலங்கட்டி மழை பெய்தது.
மேலும் குடியாத்தம் சுற்று வட்டார பகுதிகளில் சில இடங்களில் லேசான சாரல் மழையும் பெய்தது. கடுமையான வெயிலுக்கு பிறகு மாலை வேளையில் பெய்த மழையின் காரணமாக விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.