வெள்ளி சந்தை அருகே மின்கம்பத்தில் பைக் மோதி ஊர்க்காவல் படை வீரர் பலி

வெள்ளி சந்தை அருகே மின்கம்பத்தில் பைக் மோதி ஊர்க்காவல் படை வீரர் பலியானர்.

Update: 2024-06-08 09:56 GMT

இறந்த காவலர்

கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளிச்சந்தை அருகே குருந்தன்கோடு பகுதியை சேர்ந்தவர் தங்கசாமி மகன் சுபாஷ் (33). இவர் ஊர்க்காவல் படை வீரராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு கார்த்திகா என்ற பெண்ணுடன் கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

தம்பதிக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர்.  சுபாஷ் - க்கு இரண்டு கால்களிலும் தோல் வியாதி இருந்ததாக கூறப்படுகிறது. இதற்காக அவர் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை பெற்று வந்தார்.  

     நேற்று முன் தினம் இரவு சுபாஷ் மருத்துவமனை சென்று விட்டு பைக்கில் தனது வீடு நோக்கி திரும்பி கொண்டு இருந்தார்.  பேயோடு - குருந்தன்கோடு சாலையில் சரல் என்ற பகுதியில் செல்லும் போது அவரது பைக் திடீரென நிலை தடுமாறி சாலையோரம் மின்கம்பத்தில் மோதியது.      

இதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தவரை அப்பகுதியினர் மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சுபாஷ் ஏற்கனவே இறந்து விட்டார் என தெரிவித்தனர்.

இது சம்பந்தமாக வெள்ளிச்சந்தை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News