காங்கேயத்தில் மழையை வரவேற்ற மிகப்பெரிய வானவில்
காங்கேயத்தில் மழையை வரவேற்கும் விதமாக மிகப்பெரிய வானவில் நேற்று தோன்றியதை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் கண்டுகளித்தனர்.
Update: 2024-05-14 13:52 GMT
காங்கேயத்தில் நேற்று மழை பெய்த மழையின் காரணமாக காங்கேயம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் குளிர்ந்த காற்று வீசியது. இதனால் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் இந்த மலையின் காரணமாக காங்கேயத்தில் வானத்தில் மிகப்பெரிய வானவில் தோன்றியது. பொதுவாக வில்லை போல் வானத்தில் காட்சியளிக்கும் வானவில் அரை வட்டம் போல் வானத்தை மறைக்கும் வகையில் தோன்றியது மக்களிடையே மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இந்த வானவில்லை காங்கேயத்தில் அனைத்து பகுதிகளிலும் இருந்து மக்கள் கண்டதாகவும் அளவில் மிகப்பெரியதாகவும் பல வருடங்களுக்கு ஒரு முறை மட்டுமே இதுபோன்று வானவில் தோன்றும் எனவும் சிலர் கூறினார்.