பட்டா கேட்டு உண்ணாவிரத போராட்டம்
சிவகங்கையில் ஆக்கிரமிப்பு இடங்களுக்கு பட்டா கேட்டு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட குடியிருப்புவாசிகள் ஈடுப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது;
Update: 2024-01-01 01:38 GMT
பட்டா கேட்டு உண்ணாவிரதப் போராட்டம்
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே இலுப்பகுடியில் சுயம் பிரகாஷ ஈஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான 1000 ஏக்கர் நிலம் உள்ளது. இதில் 500க்கும் மேற்பட்ட வீடுகள் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளன. இந்நிலையில் உயர்நீதிமன்ற உத்தரவின்படி ஆக்கிரமிப்புகளை அகற்ற வருவாய்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டுவரும் நிலையில், பல ஆண்டுகளாக குடியிருக்கும் அந்த இடத்திற்கு பட்டா கேட்டு அப்பகுதி மக்கள் ஐந்து விளக்கு பகுதியில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்