பொறியியல் கல்லூரி மாணவருக்கு வேலை வாய்ப்பு!
தூத்துக்குடி வாகைகுளம் மதர் தெரேசா பொறியியல் கல்லூரி மாணவருக்கு பன்னாட்டு நிறுவனத்தில் ரூ.10 லட்சம் சம்பளத்தில் வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது,
By : King 24X7 News (B)
Update: 2024-05-13 05:52 GMT
தூத்துக்குடி வாகைகுளம் மதர் தெரேசா பொறியியல் கல்லூரி மாணவருக்கு பன்னாட்டு நிறுவனத்தில் 10 லட்சம் சம்பளத்தில் வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது, அண்மையில் 250 மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு ஆணைகள் வழங்கப்பட்டன.
இந்த ஆண்டு 100 சதவீத வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது, இந்த நிலையில் கணினி துறையில் இறுதியாண்டு பயிலும் ஜெரூஸ் என்ற மாணவருக்கு பன்னாட்டு நிறுவனத்தில் ஆண்டுக்கு 10.2 லட்சம் வருமானத்தில் வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது. இதற்காக ஊக்கம் அளித்த முதல்வர் ஜாஸ்பர் ஞானச்சந்திரன், இயக்குனர் ஜார்ஜ் கிளின்டன், கணினி துறை பேராசிரியர்கள் ஆகியோரை ஸ்காட் கல்வி குழும நிறுவனர் கிளிட்டஸ் பாபு, தாளாளர் பிரியதர்ஷினி அருண்பாபு ஆகியோர் பாராட்டினர்