ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினர் ஆயிரம் பேர் வலுக்கட்டாயமாக கைது
முன்னாள் அமைச்சர் பரஞ்சோதி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் காவல்துறையினர் மேடை ஏறவிடாமல் வலுக்கட்டாயமாக கைது செய்து அழைத்துச் சென்றனர்
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி திமுக நிர்வாகியால் பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் குற்றவாளிகளுக்கு சாதகமாக செயல்படும் திமுக அரசை கண்டித்து, திருச்சி புறநகர் வடக்கு மாவட்டம் சார்பில் திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் பரஞ்சோதி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் திருச்சி நம்பர் ஒன் டோல்கேட் பகுதியில் நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்தில், முன்னாள் அமைச்சர்கள் சிவபதி, வளர்மதி, பூனாட்சி , முன்னாள் அரசு தலைமை கொறடா மனோகரன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் இந்திராகாந்தி, மல்லிகா சின்னசாமி, செல்வராஜ், சிறுபான்மையினர் நலப்பிரிவு மாவட்ட செயலாளர் புல்லட் ஜான், திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட மாணவரணி செயலாளர் டி.அறிவழகன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறையினர் அனுமதி மறுத்த நிலையில் மேடையில் ஏறவிடாமல் மாவட்ட செயலாளர் பரஞ்சோதி உள்ளிட்டோரை கைது செய்தனர் இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.