ஒரு கிலோ மல்லிகை பூ ரூ.3000க்கு விற்பனை

மாட்டுத்தாவணி பூ மார்க்கெட்டில் ஒரு கிலோ மல்லி பூ ரூ.3000க்கு விற்பனையானது.

Update: 2023-12-13 06:55 GMT

மாட்டுத்தாவணி பூ மார்க்கெட்டில் ஒரு கிலோ மல்லி பூ ரூ.3000க்கு விற்பனையானது.

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

2023ன் கடைசி முகூர்த்த தினத்தை முன்னிட்டு மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ.3000க்கு விற்பனை.


மதுரை மல்லிகையின் விலை 2023ன் கடைசி முகூர்த்த தினத்தை முன்னிட்டு மதுரை மலர் சந்தையில் மல்லிகைப்பூ கிலோ ரூபாய் 3000க்கு விற்பனையானது. அடுத்த சில நாட்களுக்கும் இதே விலை நீடிக்கும் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். மதுரை மாட்டுத்தாவணி எம்ஜிஆர் பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ளது மலர் வணிக வளாகம். இங்கு மதுரை மாவட்டம் மட்டுமன்றி ராமநாதபுரம் விருதுநகர் தேனி திண்டுக்கல் சிவகங்கை மாவட்டங்களில் இருந்து பல்வேறு வகையான பூக்கள் விற்பனைக்கு கொண்டுவரப்படுகின்றன. நாள்தோறும் சராசரியாக 50 டன்னுக்கும் மேலாக இங்கு பூக்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

இந்நிலையில் 2023ன் கடைசி முகூர்த்த தினத்தை முன்னிட்டும் அடுத்தடுத்து வைகுண்ட ஏகாதேசி, கிறிஸ்துமஸ், புத்தாண்டு போன்ற பண்டிகை முன்னிட்டும் மதுரை மல்லிகை விலை இன்று கிலோ ரூ.3000க்கு விற்பனை செய்யப்பட்டது. பிற பூக்களின் விலை நிலவரம் பின்வருமாறு, முல்லை ரூ.1,000, பிச்சி ரூ.700, கனகாம்பரம் ரூ.1,800, அரளி ரூ.300, செவ்வந்தி ரூ.200, பட்டன் ரோஸ் ரூ.180, சம்பங்கி ரூ.150, செண்டுமல்லி ரூ.120 என விற்பனை செய்யப்படுகிறது.

மாட்டுத்தாவணி சில்லறை பூ வியாபாரிகள் சங்கத் தலைவர் ராமச்சந்திரன் கூறுகையில், 2023ன் கடைசி முகூர்த்த தினத்தை முன்னிட்டும் அடுத்தடுத்து வைகுண்ட ஏகாதேசி,கிறிஸ்துமஸ், புத்தாண்டு போன்ற பண்டிகை வர உள்ளதால் பூக்களின் விலை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்த விலை நிலவரம் அடுத்தடுத்த நாட்களுக்கு நீடிக்கும் என மாட்டுத்தாவணி மலர் சந்தை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News