பொள்ளாச்சியில் அறிய வகை கீரிப்பிள்ளை பிடிபட்டது

பொள்ளாச்சியில் பிடிபட்ட அறிய வகையான கீரிப்பிள்ளைகளை வனத்துறையினர் பத்திரமாக வனப்பகுதிக்குள் விட்டனர்.

Update: 2024-03-20 08:43 GMT

R_TN_CBE_POLLACHI_20.03.24_ATR_FOREST_RECOVERY_ANIMALS_ISSUE_SAKTHIVEL.01.mp4 பொள்ளாச்சியில் அறிய வகையான கீரிப்பிள்ளைகளை பிடித்து விற்பனை செய்ய முயன்ற இரண்டு இளைஞர்களை வனத்துறையினர் கைது செய்து சிறையில் அடைப்பு - பிடிக்கப்பட்ட கீரிப்பிள்ளையை பத்திரமாக வனப்பகுதிக்குள் வனத்துறையினர் விட்டனர்.. பொள்ளாச்சி..மார்ச்..20 பொள்ளாச்சி அடுத்த செல்லப்பம்பாளையம் பிரிவு பகுதியில் அரிய அபூர்வகையான கீரிப்பிள்ளைகளை பிடித்து விற்பனை செய்ய போவதாக ஆனைமலை புலிகள் காப்பக வனத்துறையினருக்கு இரகசிய தகவல் கிடைத்தது.

இதைத் தொடர்ந்து ஆனைமலை புலிகள் காப்பக பொள்ளாச்சி வனச்சரகர் புகழேந்தி தலைமையில் வனத்துறை வேட்டை தடுப்பு காவலர்கள் ஊஞ்சவேலாம்பட்டி பகுதியில் ஈடுபட்டனர்.. அப்போது சந்தேகம் படும் நிலையில் நின்றிருந்த இருவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர் அப்போது அவர்கள் வைத்திருந்த பிளாஸ்டிக் பையை சோதனையிட்டபோது அரிய வகையான கீரிப்பிள்ளைகள் வைத்திருப்பது தெரிய வந்தது.. விசாரணையில் அவர்கள் இருவரும் கொள்ளுபாளையத்தை சேர்ந்த செல்வராஜ் 27 மற்றும் திப்பம்பட்டியை சேர்ந்த சிவா 24 என்பது தெரிய வந்தது. இருவரும் வனப் பகுதியில் அத்துமீறி நுழைந்து கீரிப்பிள்ளைகளை வலை வீசி பிடித்து விற்பனை செய்ய முயற்சித்தது விசாரணையில் தெரியவந்தது.. இருவரையும் வன உயிரின பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். ம.சக்திவேல்..பொள்ளாச்சி..9976761649..

Tags:    

Similar News