திருமழிசையில் எரியாத மின்விளக்கு
திருமழிசையில் எரியாத மின்விளக்கால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளகினர்.;
By : King 24X7 News (B)
Update: 2024-04-29 08:45 GMT
இருளில் மூழ்கியுள்ள பாதை
திருவள்ளூர் மாவட்டம், திருமழிசை பாரதி நகர் அண்ணா சமுதாயக்கூடம் அருகே உள்ள மின்விளக்கு எரிவதில்லை. இதனால் இரவு நேரங்களில் இந்த பகுதியில் வாகனங்களில் செல்பவர்கள் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். மின்விளக்கு பழுதடைந்து இருப்பதால் இரவு நேரங்களில் வழிப்பறி உள்ளிட்ட குற்ற சம்பவங்கள் நடைபெறும் அபாயம் உள்ளது.
எனவே பொதுமக்கள் நலன் கருதி மின்வாரிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.