தந்தையை கத்தியால் குத்தி கொலை செய்த மகன்

குடிபோதையில் தந்தையை கத்தியால் குத்தி கொலை செய்த மகனை போலீசார் கைது செய்தனர்;

Update: 2024-05-16 04:34 GMT

தந்தையை கொன்ற மகன்

.விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லுார் அடுத்த பல்லரிப்பாளையத்தை சேர்ந்தவர் அரிகிருஷ்ணன்,50; லாரி டிரைவர். இவரது மனைவி அபிராமி,48. இவர்களின் மகன் ஆனந்தகுமார்,28; மகள் தேன்மொழி,22; ஆகிய இருவருக்கும் திருமணமாகிவிட்டது. ஆனந்தகுமார் சித்தலிங்கமடத்தில் ஸ்டூடியோ வைத்துள்ளதால், அங்கேயே தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் மாலை 5:30 மணிக்கு பல்லரிப்பாளையம் சென்ற ஆனந்தகுமார் குடிபோதையில் தனது தந்தை அரிகிருஷ்ணனிடம், எனது குழந்தைகளை பள்ளியில் சேர்க்க ரேஷன் கார்டில் பெயர் சேர்க்க வேண்டும் என்றார்.

Advertisement

அதற்கு அரிகிருஷ்ணன் மறுத்ததால் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த ஆனந்தகுமார் வீட்டிலிருந்த கத்தியை எடுத்து அரிகிருஷ்ணன் வயிறு மற்றும் நெஞ்சில் குத்திவிட்டு தப்பிச் சென்றார். தகவலறிந்த திருவெண்ணைநல்லுார் போலீசார் விரைந்து சென்று, ரத்த வெள்ளத்தில் கிடந்த அரிகிருஷ்ணனை மீட்டு திருக்கோவிலுார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவிக்கு பிறகு திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் உயிரிழந்தார். இதுகுறித்து திருவெண்ணெய்நல்லுார் போலீசார் வழக்கு பதிந்து, ஆனந்தகுமாரை கைது செய்தனர்.

Tags:    

Similar News