கருங்கல் அருகே கடையில் பெட்ரோல் விற்றதாக ஒருவர் கைது

உரிய அனுமதி பெறாமல் தீப்பற்ற கூடிய பொருட்களை விற்பனை செய்ததோடு தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்தவரை காவல்துறையினர் கைது செய்தனர்

Update: 2023-12-24 13:05 GMT

கருங்கல் அருகே கடையில் பெட்ரோல் விற்றதாக ஒருவர் கைது

குமரி மாவட்டம் கருங்கல் அருகே முள்ளங்கினா விளை பகுதியை சேர்ந்தவர் சலின் ஜோஸ் (45). அதே பகுதியில் பேன்சி ஸ்டோர் வைத்துள்ளார். இவர் உரிய அனுமதி பெறாமல் எளிதில் தீப்பிடிக்க கூடிய பெட்ரோலை தனது கடையில் வைத்து விற்பனை செய்துள்ளார். முறையான பாதுகாப்பு இல்லாமல், அரசு அனுமதியின்றியும்,  அதிக விலைக்கு விற்பனை செய்து வந்துள்ளார். இது குறித்து கருங்கல் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை நடத்தினர்.

சோதனையின் போது ஃபேன்சி கடையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 56 லிட்டர் பெட்ரோலை போலீசார் பறிமுதல் செய்தனர்.மேலும் அவரது கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்தது தெரிய வந்தது. அங்கிருந்து 42 பாக்கெட் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களையும் போலீசார்  பறிமுதல் செய்தனர். மேலும் சலின் ஜோஸ் விற்பனை செய்து வைத்திருந்த பணம் 21 ஆயிரத்தையும்  போலீசார் பறிமுதல் செய்து,  கைது செய்தனர்

Tags:    

Similar News