அம்பை அருகே தமுமுக சார்பில் மருத்துவ முகாம்
நெல்லை மாவட்டம் முதலியார்பட்டியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் தமமுக சார்ப்பில் நடைபெற்ற மருத்துவ முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டனர்;
Update: 2024-01-01 01:54 GMT
மருத்துவ முகாம்
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள முதலியார்பட்டியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகக் கிளை, கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் ஸ்ரீ மூகாம்பிகா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆகியவை இணைந்து நடத்திய இலவச பொது மருத்துவ முகாம் நேற்று நடைபெற்றது.இதற்கு மனித நேய மக்கள் கட்சி மாவட்ட துணைச் செயலர் கோதர்மைதீன் தலைமை வகித்தார். இந்த மருத்துவ முகாம் மூலம் அப்பகுதியை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட மக்கள் பயனடைந்தனர். இந்த மருத்துவ முகாமில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் கட்சியினர், குலசேகரம் ஸ்ரீ மூகாம்பிகா மருத்துவ கல்லூரி மருத்துவமனை மருத்துவர்கள் என பலரும் பங்கேற்றனர்.