காலபைரவர் சுவாமிக்கு ரூ.5 லட்சம் மதிப்பிலான புதிய தங்க கவசம்
Update: 2023-12-06 08:33 GMT
சேலம் அம்மாபேட்டை செங்குந்தர் சுப்பிரமணியசாமி கோவிலில் கால பைரவர் ஜென்மாஷ்டமி விழா நடந்தது. இந்த விழாவையொட்டி முன்னதாக காலபைரவர் சுவாமிக்கு பால், தயிர், இளநீர், மஞ்சள் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. இதனை அடுத்து ரூபாய் 5 லட்சம் மதிப்பில் புதியதாக செய்யப்பட்ட தங்க கவசம் சுவாமிக்கு அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. மேலும் எட்டு வகை நைவேத்தியங்கள், எட்டு வகை கனிகள், எட்டு வகை இனிப்பு வகைகள், எட்டு வகை வாழைப்பழங்கள், எட்டு வகை உலர்கனிகள் வைக்கப்பட்டு படைக்கப்பட்டு மகாதீபாராதனை காட்டப்பட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.