நர்ஸ் விஷம் குடித்து தற்கொலை!
திருமயம் அருகே நர்ஸ் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.;
Update: 2024-03-03 05:20 GMT
தற்கொலை
திருமயம்: அரிமளம் அண்ணாநகரை சேர்ந்தவர் மூக் கையா. கூலித்தொழிலாளி. இவரது மகள் மீனாள் (20). டிப்ளமா நர்சிங் முடித்துள்ள இவர் தனியார் ஆஸ்பத் திரிக்கு வேலைக்குச்சென்று வந்துள்ளார். இதன்பின்பு திடீரென மீனாளை பணிக்குச்செல்ல வேண்டாம் என்று பெற்றோர் கூறியுள்ளனர். இதில் மனமுடைந்த மீனாள் விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார். அவரை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மீனாள் இறந்தார். இது குறித்து அரிமளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.