பாமக வேட்பாளருக்கு கிளி ஜோசியம் பார்த்தவர் கைது...

கடலூரில் பாமக வேட்பாளருக்கு கிளி ஜோசியம் பார்த்தவர் கைது செய்யப்பட்டார்.;

Update: 2024-04-09 10:30 GMT

ஜோசியம்

கடலூர் நாடாளுமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சியின் வேட்பாளர் திரைப்பட இயக்குநர் தங்கர்பச்சான் போட்டியிடுகிறார்.

அவர் கடலூர் ஒன்றியம் தென்னம்பாக்கத்தில் ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்ட போது அங்கு இருந்த கிளி ஜோதிடர் தன்னிடம் ஜோதிடம் பார்க்கும் படி கேட்டுக் கொண்டார்.

அதற்கு சம்மதித்த தங்கர்பச்சான் அங்கு அமர்ந்து கிளி ஜோசியம் பார்த்தார். இதில் கிளி எடுத்துக் கொடுத்த சீட்டில் எதிர்காலம் சிறப்பாக உள்ளது என்று இருந்தது. இதற்கு மகிழ்ச்சி தெரிவித்த தங்கர்பச்சான் பின்னர் ஓட்டு கேட்க சென்றார்.

Advertisement

இது தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வந்தது. இந்த நிலையில் தேர்தல் பிரசாரத்தின்போது பாட்டாளி மக்கள் கட்சியின் வேட்பாளர் தங்கர் பச்சானுக்கு கிளி ஜோதிடம் பார்த்த நபரை வனத்துறையினர் கைது செய்துள்ளனர்.

வனவிலங்கு பாதுகாப்பு திருத்தச் சட்டத்தின் கீழ், கிளிகளை வளர்ப்பது குற்றம் என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் அவரிடம் இருந்த 4 கிளிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Tags:    

Similar News