பேருந்து நடத்துனரை தாக்கி மிரட்டல் விடுத்த பயணி கைது
புளியங்குடியில் பேருந்து நடத்துனரை தாக்கி மிரட்டல் விடுத்த பயணி கைது.
Update: 2024-03-22 02:36 GMT
தென்காசி மாவட்டம் புளியங்குடியில் சுப்ரமணியபுரத்தை சேர்ந்த செல்வகுமார் (36) என்பவர் இராஜபாளைத்தில் இருந்து பேருந்தில் புளியங்குடிக்கு டிக்கெட் எடுத்துள்ளார். இந்நிலையில் அவர் ஓட்டுனரிடம் பஸ்ஸை புளியங்குடி பெட்ரோல் பங்க் அருகே நிறுத்த கூறியுள்ளார். ஆனால் பஸ் அங்கு நிற்காது என நடத்துனர் கூறியதால் ஆத்திரமடைந்த நபர் நடத்துனர் ரமேஷ் குமாரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்தபுளியங்குடி காவல் நிலையத்தில் புகாரில் போலீசார் அவரை கைது செய்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.