தொலைவில் இருந்தே உடல்வெப்ப நிலையை துல்லியமாக கண்டறியும் கருவிக்கு காப்புரிமை.

புதிய கண்டுபிடிப்பு என்பதை உறுதி செய்த இந்திய அரசு அதற்கான காப்புரிமையை தற்போது வழங்கி உள்ளது.

Update: 2023-12-14 06:57 GMT

தொலைவில் இருந்தே உடல்வெப்ப நிலையை துல்லியமாக கண்டறியும் கருவிக்கு காப்புரிமை

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
நீலகிரி மாவட்டம் உதகையை சேர்ந்தவர் பட்டதாரி ஆனந்த். கொரோனா பரவல் தொடங்கிய போது 2020-ல் தொலை தூரத்தில் இருந்து ஒருவரது உடல் வெப்பநிலையை கண்டறியும் தானியங்கி கருவியை உருவாக்கினார். இந்த புதிய கருவியை ஆய்வு செய்த நீலகிரி மாவட்ட நிர்வாகம், காவல்துறை மற்றும் சுகாதார துறை பாராட்டு தெரிவித்ததுடன் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைகளில் நுழைவாயிலில் பொறுத்தி உடல் வெப்பநிலையை கண்காணிக்க பயன்படுத்தினர். சுமார் 3 அடி நீளத்தில் வடிவமைக்கபட்ட இக்கருவியில் உடல் வெப்பநிலையை தொலை தூரத்தில் இருந்தே துல்லியமாக பரிசோதிக்கும் சென்சார்கள், சம்பந்தபட்டவரை புகைபடம் எடுக்கும் தானியக்கி கேமாராக்கள், மனிதர்களின் உயரத்திற்கு ஏற்ப தானாக மேலும் கீழும் நகர கூடிய ரோபோ கருவி என நவீன சென்சார் கருவிகளுடன் பிரத்யேகமாக வடிவமைக்கபட்டது. Automatic temperature with attendance measuring system எனப்படும் இக்கருவிக்கு தொடக்கத்திலேயே நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில் 2020-ஆம் ஆண்டு காப்புரிமைகாக விண்ணப்பிக்கபட்டது. ஆனந்தின் இந்த கண்டு பிடிப்பு பல்வேறு ஆய்வுகளுக்கு உட்படுத்தபட்ட நிலையில் இக்கருவி புதிய கண்டுபிடிப்பு என்பதை உறுதி செய்த இந்திய அரசு அதற்கான காப்புரிமையை தற்போது வழங்கி உள்ளது.
Tags:    

Similar News