கிணற்றில் தவறி விழுந்த மயில் உயிருடன் மீட்பு !
வேடசந்தூர் அருகே கிணற்றில் தவறி விழுந்த மயிலை தீயணைப்பு துறையினர் உயிருடன் மீட்டனர்.;
By : King 24x7 Angel
Update: 2024-04-27 06:10 GMT
மயில்
வேடசந்தூர் அருகே உள்ள முருநெல்லிகோட்டை ஊராட்சி, தீத்தாகவுண்டனூரை சேர்ந்தவர் வெற்றிவேல் விவசாயி. இவரது தோட்டத்தில் உள்ள கிணற்றில் நேற்று முன்தினம் மாலை ஆண் மயில் விழுந்துவிட்டது. அந்த மயில் கிணற்று நீரில் தத்தளித்தது. இதனை பார்த்த வெற்றிவேல் உடனடியாக வேடசந்தூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.இதையடுத்து தீயணைப்பு நிலைய அலுவலர் ஜேம்ஸ் அருள்பிரகாஷ் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர். அவர்கள் கிணற்றுக்குள் இறங்கி வலை மூலம் மயிலை உயிருடன் மீட்டனர்.பின்னர் அதனை அய்யலூர் வன அலுவலர் சங்கரிடம் ஒப்படைத்தனர். மீட்கப்பட்ட மயில் வனப் பகுதியில் பாதுகாப்பாக விடப்படும் என வனத் துறையினர் தெரிவித்தனர்.