மாடியில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி மரணம்
நித்திரவிளை அருகே மாடியில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.;
By : King 24X7 News (B)
Update: 2024-05-08 04:53 GMT
கோப்பு படம்
கன்னியாகுமரி மாவட்டம் நித்திரவிளை அருகே ஆலங்கோடு பருத்திவிளை பகுதியை சேர்ந்தவர் ராஜமணி. சென்டரிங் தொழிலாளி. நேற்று மாலை புதிதாக கட்டிக் கொண்டிருக்கும் வீட்டின் மாடிப்படியில் நின்று பல கையை கழற்றி உள்ளார். அப்போது நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார்.
இதில் தலையில் பலத்த காயமடைந்தவரை உறவினர்கள் மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ள னர். அங்கு ராஜமணியை பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளார். இது குறித்து அவரது மகன் ஷைஜு நித்திரவிளை போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.