திருப்பத்தூர் அருகே கிராமத்தில் நுழைந்த வட மாநில நபரால் பரபரப்பு
திருப்பத்தூர் அடுத்த பாச்சல் கிராமத்தில் நுழைந்த வட மாநிலநபரை பொதுமக்கள் மின் கம்பத்தில் கட்டி வைத்தனர்.;
By : King 24X7 News (B)
Update: 2024-02-04 11:59 GMT
கட்டி வைத்துள்ள வடமாநில நபர்
திருப்பத்தூர் அடுத்த பாச்சல் கிராமத்தில் நுழைந்த வட மாநிலநபர்! கரண்ட் கம்பத்தில் கட்டி வைத்த பொதுமக்களால் பரபரப்பு! திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த பாச்சல் கிராமத்தில் இரவு வட மாநில நபர் ஒருவர் சந்தேகத்துக்குரிய வகையில் சுற்றித்திரிந்ததாக தெரிகிறது.
இதன் காரணமாக சந்தேகத்திற்குரிய நபர் என்பதால் அப்பகுதி மக்கள் கரண்ட் கம்பத்தில் கட்டி வைத்து ஜோலார்பேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர் பின்னர் விரைந்து வந்த ஜோலார்பேட்டை போலீசார் வட மாநில நபரை மீட்டு யார் எந்த பகுதியை சார்ந்தவர்? என்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பாச்சல் கிராமத்தில் வட மாநில நபர் புகுந்து கரண்ட் கம்பத்தில் கட்டி வைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுகிறது.