இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் ஒருவர் காயம் - காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை
Update: 2024-01-03 05:45 GMT
விசாரணை
மதுரை மாவட்டம் கள்ளிக்குடி பகுதியைச் சார்ந்தவர் மாதவ கண்ணன் வயது 29 இவர் தனியார் நிதி நிறுவனத்தில் வேலை செய்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த ஒன்றாம் தேதி வேலை காரணமாக மதுரை கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் விருதுநகர் அருகே உள்ள புல்லக்கோட்டை விலக்கில் சாலையைக் கடக்க முயற்சி செய்த மாதவ கண்ணன் மீது அதி வேகமாக வந்த கார் ஒன்று மோதி விபத்து ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்றதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் அருகில் இருந்தவர்கள் மாதவ கண்ணனை மீட்டு விருதுநகர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர் விருதுநகர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாதவ கண்ணன் அழைத்த புகாரியின் படி மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.