கஞ்சாக்களை சைக்கிள்களில் கடத்தி விற்பனை செய்தவர் கைது
திண்டுக்கல் அருகே மீனாட்சி நாயக்கன்பட்டி வழியாக மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்தி விற்பனை செய்தவரை போலீசார் கைது செய்தனர்.;
By : King 24x7 Angel
Update: 2024-02-09 06:31 GMT
கஞ்சாக்களை சைக்கிள்களில் கடத்தி விற்பனை செய்தவர் கைது
திண்டுக்கல் அருகே மீனாட்சி நாயக்கன்பட்டி வழியாக மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்துவதாக மதுவிலக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் மதுவிலக்கு போலீஸ் துணை சூப்பிரண்டு சுந்தரபாண்டியன் மேற்பார்வையில், மீனாட்சி நாயக்கன்பட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வெள்ளை சாக்கு பையுடன் வந்த வாலிபரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் கன்னிவாடி தெத்துப்பட்டி வடக்கு தெருவை சேர்ந்த ராஜ்குமார் (வயது 36), மேலும் விற்பனைக்காக மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்தி வந்ததும் தெரிய வந்தது.இதையடுத்து ராஜ்குமாரை போலீசார் கைது செய்தனர்.