பாப்பிரெட்டிப்பட்டி அருகே பழக்கடையில் எலக்ட்ரிக் தராசு திருடியவர் கைது

பாப்பிரெட்டிப்பட்டி அருகே பழக்கடையில் ஐந்தாயிரம் மதிப்புள்ள எலக்ட்ரிக் தராசு திருடியவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2024-03-31 08:56 GMT

காவல் நிலையம் 

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த பொம்மிடி மஜீத் தெரு பகுதியைச் சேர்ந்தவர் பழனிவேல் பாப்பிரெட்டிப்பட்டி செல்லும் வழியில் தனது அக்கா இசைவாணியுடன் சேர்ந்து பழக்கடை நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் கடந்த 28-ம் தேதி இரவு 11 மணிக்கு கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றவர் மீண்டும் 29-ம் தேதி காலை வழக்கம் போல் 5 மணிக்கு கடையை திறந்து பார்த்தபோது கடையில் உள்ள பொருட்கள் சிதறி கிடந்தது. அப்போது சோதனை செய்து பார்த்ததில் ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள எலக்ட் ரானிக் தராசு திருடு போயிருந்தது தெரியவந்தது.

இது குறித்து பொம்மிடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் காவல்துறையினர் அங்குள்ள சி.சி.டி.வி கேமராவை ஆய்வு செய்து விசாரித்ததில் பொம்மிடி பகுதியைச் சார்ந்த ரஞ்சித் குமார் தெரிய வந்தது.அவரை கைது செய்த காவலர்கள் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News