பரங்கிப்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மனு அளிப்பு
மீதுகுடி குடியிருப்போர் கூட்டமைப்பின் சார்பில் குறுக்கு சாலைகள் அமைத்து தர கோரி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது;
Update: 2023-12-24 11:00 GMT
மனு அளிப்பு
கடலூர் மாவட்டம், புவனகிரி அருகே சி. கொத்தங்குடி மற்றும் மீதுகுடி குடியிருப்போர் கூட்டமைப்பின் சார்பில், ஜோதி நகர் மற்றும் செங்காளியப்பன் நகர் குறுக்கு சாலைகள் அமைக்கபடாததால் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். இதனால் பொதுமக்கள் நலன்கருதி புதியதாக சாலைகள் அமைத்துதரக்கோரி பரங்கிப்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.