மது பாட்டில்களை மாலையாக அணிந்த ஆசிரியர் - வேட்பமனு தாக்கல் !
மது பாட்டில்களை மாலையாக அணிந்து தனியார் பள்ளி ஆசிரியர் வேட்பமனு தாக்கல் செய்தார்.;
By : King 24x7 Angel
Update: 2024-03-27 07:30 GMT
வேட்பமனு தாக்கல்
மது பாட்டில்களை மாலையாக அணிந்து வேட்பமனு தாக்கல் செய்த தனியார் பள்ளி ஆசிரியர். நாடெங்கும் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுவதற்கான அறிவிப்புகள் வெளியாகி தொடர்ந்து பணிகள் நடைபெற்று வருகிறது. முதல் கட்ட தேர்தல் நடக்கும் தமிழகத்தில் இன்று வேட்பு மனு தாக்கல் செய்ய இறுதி நாள் என அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் கரூர் பாராளுமன்ற தொகுதியில், வேட்புமனு தாக்கல் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முன்னணி அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள் வேட்புமனு தாக்கல் செய்து உள்ள நிலையில், இன்று கரூர் எடுத்த நெரூர் பகுதியைச் சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியர் சதீஷ்குமார், கழுத்தில் மது பாட்டிலை மாலையாக அணிந்து, இன்று மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு தாக்கல் செய்துள்ளார். அப்போது, மதுவை ஒழிப்போம், மணல் கொள்ளையை தடுப்போம் என்ற பதாகையும் கையில் ஏந்தியவாறு வந்து மனு தாக்கல் செய்தார். அவருடன் பணியாற்றும் சில ஆசிரியர்களும் உடன் வந்து தங்கள் ஆதரவை தெரிவித்தனர்.